2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வயதான ஆசிரியரைத் தாக்கிய பெண் பொலிஸ் அதிகாரிகள்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 23 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பீகாரில் வயதான பாடசாலை ஆசிரியர் ஒருவரை, இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் தடியால் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான ‘நாவல் கிஷோர் பாண்டே‘ என்ற ஆசிரியரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று கடை வீதிக்குச் சென்ற அவர்,கீழே விழுந்த தனது சைக்கிளை எடுக்கத் தாமதம் ஆனதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த இரு பெண்பொலிஸ் அதிகாரிகளும் ஆசிரியரைத்  தடியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பெண் பொலிஸ் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென பீகார்  காவல் துறை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .