Freelancer / 2024 நவம்பர் 21 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசம் - கர்ஹாலில் உள்ள கஞ்சாரா நதி பாலம் அருகே, புதன்கிழமை (20), தலித் இளம்பெண் ஒருவரின் சடலம், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
23 வயதான குறித்த பெண்ணை, அவரது உறவினர் ஒருவரே, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்ஹால் இடைத்தேர்தலில், பாஜக-வுக்கு வாக்களிக்கப்போவதாக குறித்த பெண் கூறியுள்ளார். இது அப்பெண்ணின் உறவினரான பிரசாந்த் யாதவ் என்பவரை கோபப்படுத்தியுள்ளது. “சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என, குறித்த நபர் அந்த பெண்ணை, 19ஆம் திகதியன்று மிரட்டியதாக, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினர்.
இதையடுத்து, குறித்த நபரும் அவரது நண்பரும், நவம்பர் 19ஆம் திகதியன்று, அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில், வாக்களிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்த நாள் 20ஆம் திகதி புதன்கிழமையன்று, அந்த பெண்ணின் உடல், ஒரு சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
38 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago
1 hours ago