2025 ஜூலை 19, சனிக்கிழமை

வாடகைத் தாய் முறையில் பிறந்த கன்றுக்குட்டி

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடகைத் தாய் முறை குழந்தை பெறுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். பல பிரபலங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். ஆனால் இந்திய வரலாற்றில் முதன்முறையாக வாடகைத் தாய் மூலம் ஒரு பசு கன்று பிறந்துள்ளது.

ஓங்கோல் ரக பசுவிற்கு சாஹிவால் ரக கன்று பிறந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்தார்.  

மாநில அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.எஸ். ஜவஹர் ரெட்டியின் அறிவுறுத்தலின் பேரில், TTD மற்றும் SV கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து உள்நாட்டு கால்நடை இனங்களை மேம்படுத்த கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் ஒரு பகுதியாக, மேலு வகை நாட்டு மாடு இனத்தை வளர்க்கும் வகையில், SV பசு பராமரிப்பு நிலையத்தில், மேலு இன மாடுகளிடம் இருந்து முட்டை சேகரிக்கப்பட்டது.

 எஸ்வி கால்நடை பல்கலைக்கழகத்தின் ஐவிஎஃப் ஆய்வகத்தில் செயற்கை முறையில் கருக்கள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக டிடிடி கோசாலை மாடுகளில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,   ஜூன் 24 இரவு வாடகைத் தாய் முறையில் ஓங்கோல் பசுவிற்கு பிறந்த சாஹிவால் கன்று பிறந்துள்ளது. இதற்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டதாக தேவஸ்தான அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X