2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விமானத்தில் சில்மிஷம்: நடிகை கொடுத்த ஷாக்

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பாக்கியலட்சுமி' சீரியலில் போல்டான கேரக்டரில் நடித்துள்ள திவ்யா கணேஷ், விமானத்தில் பயணம் செய்த போது அவரது இடுப்பில் கைவைத்து சில்மிஷம் செய்த நபரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவர் ரசிகர்களை நேரில் சந்தித்த போது ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில்," தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு இரவு விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது இடுப்பு பகுதியில் ஏதோ ஓடுவது போன்று தெரிந்துள்ளது. என்னவென்று பார்த்த போது எதுவும் இல்லை. ஆனால், மீண்டும் அதே போல உணர்வு ஏற்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த ஒருவர் எனது இடுப்பில் கைவைத்து சில்மிஷம் செய்தது தெரிய வந்தது. இதனால் எனக்கு வந்த கோபத்திற்கு அந்த நபரின் கன்னத்தில் நான்கு அறை விட்டேன். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது சகித்துக் கொண் டு செல்லாமல் உடனடியாக இதுபோன்ற தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .