2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வீதியில் பணத்தை அள்ளி வீசிய நபர் கைது

Ilango Bharathy   / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நபர் ஒருவர் வீதியில் பொது மக்களை நோக்கி  பணத்தை அள்ளி வீசிச்சென்ற    சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பெங்களூரில், கே.ஆர்.மார்க்கெட் அருகே உள்ள மேம்பாலத்தில் நேற்று முன்தினம் காலை 10.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சம்பவ தினத்தன்று கோர்ட்-சூட் அணிந்து கொண்டு இருச்சக்கர வாகனமொன்றில் குறித்த மேம்பாலத்திற்கு வந்திறங்கிய நபர், தனது பையில் இருந்த பணத்தை எடுத்து  மக்களை நோக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனை சற்றும் எதிர் பாராத மக்கள் அப்பணத்தை எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இது தொடர்பாக  பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்

பணத்தை வீசிச் சென்றவர் பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த அருண் என்பதும், தொழிலதிபரான இவர் யூ-டியூப் சேனல்  ஒன்றை நடத்தி வருகின்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக அருண் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .