2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெயில் காலத்தில் வெப்பத்தை உணராத அதிசய மனிதர்

Freelancer   / 2023 ஜூலை 04 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில மாதங்களாக வெயில் 45 டிகிரியை தாண்டி கொளுத்தி வரும் நிலையில், ஒருவர் மட்டும் ஸ்வெட்டர், குல்லாவுடன் வாழ்ந்து வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

ஆம், உண்மை தான். வெயிலை சமாளிக்க நாம் எல்லோரும் மின் விசிறிகள், ஏசி மற்றும் ஏர் கூலர்களை பயன்படுத்தி வருகையில், விதி விலக்காக ஒருவர் மாறி வாழுகிறார். மகேந்திர நகரில் வசிக்கும் சந்த்லால் என்பவர் தான் இப்படி வினோதமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறார்.

இவர் இந்த 45 டிகிரி வெயிலிலும் மூன்று அடுக்கு கொண்டஸ் வெட்டரையும், தலைக்கு அடர்த்தியான குல்லாவையும் போட்டுகொள்கிறார். வெயில் காலத்தின் பகல் மற்றும் இரவு என எல்லா நேரங்களிலும் ஸ்வெட்டரை தான் இவர் அணிந்து கொள்கிறார் . மேலும், அவரது காதுகளை மூடிக்கொள்ள கதகதப்பான தொப்பி மற்றும் சால்வை அணிந்து கொள்கிறார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இவருக்கு இவ்வளவு வெயிலும் கொப்புளங்களோ வியர்வையோ வரவில்லை.

மருத்துவர்கள் கூட திகைத்து போயுள்ளார்கள். எப்படி இவ்வளவு வெப்பத்தையும் இவரால் தாங்கிகொள்ள முடிகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இதுமட்டுமல்லாது, இவர் கோடை காலத்திலும் குளிர் போன்ற உணர்வை உணர்வதாகவும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X