A.K.M. Ramzy / 2021 மார்ச் 09 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்” என்றார்
28 minute ago
46 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
46 minute ago
58 minute ago
1 hours ago