Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 09 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியப் பிரதேசம் சித்ரகூட் பகுதியில் அமைந்துள்ள ஹனுமன் கோவில் அப்பகுதி பிரசித்தி பெற்ற கோவிலாகத் திகழ்கிறது. அதற்குக் காரணம் இந்த கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் தான். ஹனுமனுக்கு நைவேத்தியமாகக் கஞ்சா படைக்கப்படுகிறது. மேலும், ஹனுமனுக்குப் படைக்கப்பட்ட கஞ்சா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
பொதுவாக அனுமன் கோவில்களில் பிரசாதமாகவும், நைவேத்தியமாகவும் லட்டு, பூந்தி, அடை அல்லது துளசி போன்றவை தான் முதன்மையான பிரசாதமாக வழங்கப்படும். ஆனால் இந்த கோவிலில் வித்தியாசமாகக் கஞ்சா வழங்கப்படுகிறது. மேலும், ஸ்ரீ ராமர் வனவாசம் சென்றிருந்த போது குறிப்பிட்ட காலத்திற்குச் சித்திரகூடத்தில் வசித்தார் என்று கூறப்படுகிறது. அதனையடுத்து இந்த பகுதியில் ஹனுமனுக்குக் கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹனுமான் சாலீஸாவை பாராயணம் செய்வதில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சித்திரக் கூட ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்று. கஞ்சா பிரசாதம் என்பது சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரையுமே மகிழ்ச்சியாக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே இருக்கிறது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago