A.K.M. Ramzy / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர்
விருதுநகர் அருகே தனியார் பஸ்ஸொன்று ஹோட்டலுக்குள் புகுந்ததில் சாரதி உட்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள இருக்கண் குடியில் இருந்து பாலவனத்தம், அருப்புக் கோட்டை வழியாக மதுரைக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. பாலவனத்தம் கிராமத்தில் சென்றபோது பஸ்ஸின் இடது முன்பக்க டயர் வெடித்தது. அப்போது சாரதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இடதுபுறமாக உள்ள ஹோட்டலுக்குள் புகுந்தது.
இதில், பஸ்ஸின் சாரதி உட்பட நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். ஹோட்டலின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த காஸ் அடுப்பு, சிலிண்டர்கள் பஸ்ஸுக்கு அடியில் சிக்கிக் கொண்டன.
சிலிண்டரில் இருந்து காஸ் கசிவும் ஏற்பட்டது. சிலிண்டரில் இருந்து வெளியேறிய காஸ் கசிவு நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 minute ago
40 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
40 minute ago
41 minute ago
52 minute ago