Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 11 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 110 கோடியைக் கடந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நேற்று இரவு 7:00 மணி நிலவரப்படி, மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 110கோடியே 21இலட்ச்சத்தைக் கடந்தது. இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த மக்கள் தொகையில், 79.2 சதவீதம் பேருக்கு, ஒரு டோஸ் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது; 37 சதவீதம் பேருக்கு, இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூஸ்டர்டோஸ் எனப்படும் கூடுதல் தடுப்பூசி போடுவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா நேற்று கூறியதாவது: கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கென கால அவகாசம் உள்ளது.
இரண்டாவது டோஸ் செலுத்தியதில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
8 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Aug 2025