2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

16 ஆயிரம் அறுவை சிகிச்சை: மாரடைப்பால் டாக்டர் மரணம்

Freelancer   / 2023 ஜூன் 08 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பணிக்காலத்தில் 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த வைத்தியர், மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41).   இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார்.

ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார்.  

திங்கள் கிழமை இரவு நோயாளிகளுக்கு வழக்கம்போல் மருத்துவம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அவர், இரவு உணவுக்குப் பிறகு படுத்து தூங்கியுள்ளார். அவர் எழுந்திருக்கவே இல்லை. அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X