2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

50 பெண்களிடம் அத்துமீறிய பொலிஸ் அதிகாரிகள்?

Ilango Bharathy   / 2023 ஜனவரி 18 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர்   தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் குறித்த யுவதி, நள்ளிரவு வேளை தண்டளம் வீதியோரம் தனது ஆண் நண்பருடன்  தொலைபேசியில் பேசியவாறு சென்று கொண்டிருந்த போது அங்கு காக்கிச்சீருடையில் வந்த இருவர், தங்களை பொலிஸ் அதிகாரிகள் எனவும்,” உன்னை விசாரிக்க வேண்டும்”  எனவும்  கூறி யுவதியை வலுக்கட்டாயமாக  தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து ஏ.டிஎஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான பொலிஸார் விசாரணைக்கு களமிறக்கப்பட்டனர்.

இதனையடுத்து தீவிர தேடுதலின் பின்னர் குற்றவாளிகளான நாகராஜ் மற்றும் பிரகாஷைப் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ”குறித்த இருவரும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு  இரவு வேளைகளில் வீடு செல்லும் பெண்களைக் குறிவைத்து, பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது  தெரிய வந்துள்ளது.

அத்துடன் இவர்கள் பல காதல் ஜோடிகளிடம்  தம்மை பொலிஸ் அதிகாரிகளாக இனம்காட்டி பணம் பறித்துள்ளனர் எனவும், 50 க்கும் மேற்பட்ட  பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்களிடமிருந்து  அரிவாள் கத்தி, ரிவால்வார், வாக்கிடாக்கி, இரு சக்கரவாகனங்கள், இரும்பு ராடுகள், கையுறை, முகமூடி, கட்டர், மிளகாய் பொடி ஆகியவற்றைக் கைப்பற்றிய பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .