2026 மார்ச் 07, சனிக்கிழமை

600 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 11 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் 600 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திலுள்ள தீசாப் பகுதியில் நேற்று தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 20இக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்த நிலையில், அந்த பஸ் காலை 10.15 மணியளவில் காலனிமோர் என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள 600 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. பயணித்த பஸ் பள்ளத்தாக்கில் பலமுறை உருண்டு நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 9 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக இமாசல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .