Freelancer / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும், திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு நாளைய தினம்(5)திகதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது,
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்தநிலையில், பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் வெற்றிடமாக காணப்பட்டது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் வெற்றிடமாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பி்க்கப்படவுள்ளது,.
கேரளாவில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த, 50 ஆண்டுகளாக உம்மன் சாண்டி வென்று வந்த இந்தத் தொகுதியில், அவருடைய மகன் சாண்டி உம்மனை, காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் சார்பில் ஜேய்க் தாமஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

19 minute ago
23 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
29 minute ago
48 minute ago