2025 ஜூலை 19, சனிக்கிழமை

8.50 கோடி ரூபாயை கொள்ளை: பழஜூஸில் சிக்கிய ஜோடி

Freelancer   / 2023 ஜூன் 20 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நிறுவனமொன்றில் துப்பாக்கி முனையில் 8.50 கோடி ரூபாயை கொள்ளையடித்த கோஸ்டியைச் சேர்ந்த இளம் ஜோடியொன்று கோவிலில் வழங்கிய பழஜூஸில் சிக்கிக்கொண்ட சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது.

பட்டப்பகலில் இடம்பெற்ற இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சந்தேகத்தின் பேரில் ஏழுவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணைகளில், அக்கும்பலைச் சேர்ந்த கணவன், மனைவி தொடர்பிலான தகவல் கசிந்தது.

தம்பதியை கைது செய்ய பொலிஸார் தீவிரம் காட்டினர். நேபாளம் தப்பிச்செல்ல தம்பதி திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. எனினும்,   உத்தரகாண்ட்டில் உள்ள சீக்கிய மத, இந்துமத வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

 அங்கு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்த நிலையில் தம்பதியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், வித்தியாசமான திட்டம் தீட்டிய பொலிஸார் வழிபாட்டு தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு   10 ரூபாய்க்கு வழங்கப்படும் ஜூசை  பொலிஸார் இலவசமாக வழங்கினர்.   பஞ்சாப் பொலிஸார் மாற்று வேடம் அணிந்து இலவசமாக பழ ஜூஸ் வழங்கினர். அப்போதே அந்த ஜோடியை பொலிஸார் கண்டுப்பிடித்தனர்.

 கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து 21 இலட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  8 கோடி ரூபாயில் இதுவரை 6 கோடி ரூபாயை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X