2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

9 ஆண்டுகளில் 15 பெண்களை திருமணம் செய்த ஆசாமி

Freelancer   / 2023 ஜூலை 11 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகா மாநிலம் பனசங்கரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான மகேஷ் வெறும் 5ஆம் வகுப்பு வரை தான் படித்தவர். ஆனால், கடந்த 10 ஆண்டுகாலமாக பலே மோசடி மன்னனாக வலம் வந்துள்ளார்.

இவர் 2014ஆம் ஆண்டு தொடங்கி மெட்ரிமோனி தளங்கள் வாயிலாக பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வந்துள்ளார். இவர் தன்னை வைத்தியர், பொறியியலாளர், தனியார் ஒப்பந்தக்காரர் என்று ஒவ்வொரு பெண்களிடமும் வேறு வேறு பொய்களை சொல்லி தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

இவ்வாறு இவர் கடந்த 9 ஆண்டுகளில் 15 பெண்களை மோசடி செய்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் மூலம் இவருக்கு 4 குழந்தைகள் வேறு பிறந்துள்ளது. ஒரு கட்டத்தில் இவர் தன்னை வைத்தியர் என்று நிரூபிக்க   போலியான சிகிச்சை நிலையத்தையும் நடத்தி வந்துள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் மைசூரில் மென் பொறியியலாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிடம் இவர் பணம் மற்றும் நகை கேட்டு தொல்லை செய்துள்ளார். பெண் தர மறுக்கவே கிடைத்த நகை, பணத்தை திருடிவிட்டு தலைமறைவானார். இதைத் தொடர்ந்து அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் தான் பொலிஸார் தனிப்படை அமைத்து மகேஷை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X