Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 09 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய கோப்புகளை அலட்சியமாக கையாள வேண்டாம். சொந்தபந்தங்களால் அன்புத்தொல்லைகள் உண்டாகும். பழையகடனைத் தீர்ப்பதற்காக முயற்சிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்களின் நட்பும் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்லது நடக்கும் நாள்.
மிதுனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். காரியம் சித்தியாகும் நாள்.
கடகம்: குடும்பத்தில் வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள் .
சிம்மம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யோகா தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்
கன்னி: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோ கத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நிறைவான நாள்.
துலாம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப் படாமல் இருங்கள்.தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகு முறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோ கத்தில் வேலைச் சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
தனுசு: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவைப்படும். செயல்பட வேண்டிய நாள்.
மகரம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை எளிதாக தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
கும்பம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிக்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் முக்கிய தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.
18 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
2 hours ago