2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (13.06.2014)

A.P.Mathan   / 2014 ஜூன் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (13.06.2014)

மேடம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பக்குவமாக பேசி பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் நல்ல யோசனை சொல்வார்கள்.
அஸ்வினி : இன்பம்
பரணி : பாராட்டு
கிருத்திகை 1ஆம் பாதம்: நலம்


இடபம்
ஆரோக்கியத்திற்காக மாற்று மருந்தை எடுத்துக் கொள்வீர்கள். இல்லத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி : மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: திருப்பம்


மிதுனம்
சுப விரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: செலவு


கடகம்
நிதி நிலை உயரும் நாள். எதிர்காலம் இனிமையாக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தலைவர்களின் சந்திப்புக்கள் கிடைக்கும்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: முயற்ச்சி
ஆயில்யம்: சந்திப்பு


சிம்மம்
இயல்பான வாழ்க்கையில் இன்பம் கூடும் நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். 
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்


கன்னி
தடைகள் விலகி தனலாபம் கூடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் மேலோங்கும்.
உத்திரம் 2, 3, 4: லாபம்
அஸ்தம்: சந்திப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: சிந்தனை


துலாம்
ஆலய வழிபாட்டின் மூலம் ஆனந்தம் காணலாம். மனதில் இனம் புரியாத கவலை மேலோங்கும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : அமைதி
சுவாதி : கவலை
விசாகம் 1, 2, 3: கடன்


விருட்சிகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். தீடீர் பயணம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த குழப்பங்கள் அகலும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: பயணம்
கேட்டை: அமைதி 


தனுசு
மதிப்பும் மரியாதையும் உயரும். மருந்து விடயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பங்கள் விலகும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: கவனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்


மகரம்
நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். பொன், பொருள் போன்றவற்றில் சேர்க்கை உண்டாகும். தீயவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: கவனம்


கும்பம்
பொது நல ஈடுபாடு அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: அமைதி


மீனம்
உடன் பிறப்புக்கள் வகையில் ஆதரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த விரோதங்கள் விலகும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .