மேடம்
அடிப்படை வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். வாக்குறுதிகளைக்க காப்பாற்றி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரிபடையும்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : உழைப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும். வேலைப்பளு குறையும். தந்தை வழி உறவினர்களால் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : ஓய்வு
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
மிதுனம்
பேச்சில் நிதானம் தேவை. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் திடீர் செலவுகள் ஏற்பட்டு அகலும்.
மிருகசீரிடம் 2, 3: கவனம்
திருவாதிரை: செலவு
புனர்பூசம்: துன்பம்
கடகம்
விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாள். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : இன்பம்
ஆயில்யம்: மகிழ்ச்சி
சிம்மம்
எந்த செயலையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உங்களின் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். பாக்கிகள் நிலுவையின்றி வசூலாகும்.
மகம்: கவனம்
பூரம்: மதிப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
கன்னி
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தனவரவு திருப்தி தரும்.
உத்திரம் 2, 3, 4: அக்கறை
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
துலாம்
வியாபாரத்தில் விரோதங்கள் விலகும். பாதியில் நின்ற பணிகளைத் தொடங்குவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி : சந்திப்பு
விசாகம் 1, 2, 3: லாபம்
விருட்சிகம்
வெற்றிச்செய்திகள் வீடு வந்து சேரும். உடன்பிறப்புக்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: லாபம்
கேட்டை: இன்பம்
தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கடல் தாண்டி வரும் செய்திகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
மூலம்: இன்பம்
பூராடம்: கவனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி
மகரம்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவார்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
மாற்றங்களால் ஏற்றம் காண்பீர்கள். விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள்.
அவிட்டம் 3, 4: முன்னேற்றம்
சதயம் : செலவு
பூரட்டாதி 1, 2, 3: கவனம்
மீனம்
புதிய பொறுப்புக்களும் பதவிகளும் வந்து சேரும். நல்லவர்கள் நாடி வந்து உதவி செய்வார்கள். தொலை தூரப் பயணங்கள் கைகூடிவரும்.
பூரட்டாதி 4: பொறுப்பு
உத்திரட்டாதி : உற்சாகம்
ரேவதி : பயணம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.