மேடம்
வருமானம் பெருகி வளம் காணும் நாள். ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். அரசு வழி அனுகூலங்கள் உண்டு.
அஸ்வினி : முன்னேற்றம்
பரணி : லாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவார்கள். இடம் வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் ஏற்படும். வழிபாடுகளால் வளர்ச்சி ஏற்படும் நாள்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
மிதுனம்
பெண்களால் ஏற்பட்ட மனக்கலக்கங்கள் விலகும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து இணையும். எதிர்பாராத காரியம் ஒன்று எளிதில் முடிவடையும்.
மிருகசீரிடம் 2, 3: கவனம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: செலவு
கடகம்
எதிரிகளின் பலம் மேலோங்கும். எதிர்பாராத சில விரயங்களை காலை நேரத்தில் சந்திக்க நேரிடலாம். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் அதிகரிக்கும்.
புனர்பூசம்: கவலை
பூசம் : கவனம்
ஆயில்யம்: ஆதாயம்
சிம்மம்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாள்வது அவசியமாகும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்
கன்னி
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.
உத்திரம் 2, 3, 4: முயற்ச்சி
அஸ்தம்: அக்கறை
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
துலாம்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து மகிழ்வீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : இன்பம்
சுவாதி : பெருமை
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
விருட்சிகம்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: லாபம்
கேட்டை: இன்பம்
தனுசு
மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். நீண்ட நாளைய கடன்கள் வசூலாகும்
மூலம்: நிறைவு
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
மகரம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: ஆதரவு
கும்பம்
ஆதாயம் இல்லாத அலைச்சல்கள் ஏற்படலாம். உறவினர்களின் வருகை உண்டாகலாம். சுப செலவுகள் அதிகரிக்கலாம்.
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம் : வருகை
பூரட்டாதி 1, 2, 3: செலவு
மீனம்
பணியில் இருந்த தொய்வு அகலும். மருத்துவ செலவு குறையும். கொடுக்கல் - வாங்கல் சீரான முறையில் செயல்படும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : வசதி
ரேவதி : இன்பம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.