2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (28.10.2013)

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (28.10.2013)
 
மேடம்
யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி பெறும். வங்கி சேமிப்பு உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பொது வாழ்வில் பாராட்டும் புகழும் கூடும்.
அஸ்வினி : முன்னேற்றம்
பரணி :  மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம் : இன்பம்
 
 
இடபம்
வாழ்க்கை தரம் உயர வழி வகைகள் செய்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். மனச்சுமைகள் குறையும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : முயற்சி
மிருகசீரிடம் 1, 2 : ஆர்வம்
 
 
மிதுனம்
வீண் விவகாரங்களில் இருந்து விடுபடுவீர்கள். பகையாளிகள் உங்கள் நண்பர்களாகலாம். வரவிற்கு ஏற்ற செலவுகள் காணப்படும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: செலவு
 
 
கடகம்
புதிய முயற்சிகளை யோசித்து செயல்படுத்துவது நல்லது. காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள். நாவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
புனர்பூசம்: யோசனை
பூசம் : வழிபாடு
ஆயில்யம்: கவனம்
 
 
சிம்மம்
வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்ட நாளைய ஆசை ஒன்று நிறைவேறும். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: கவனம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
கன்னி
நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். பெண் வழி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நிழல் போல தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும்.
உத்திரம் 2, 3, 4: நன்மை
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
துலாம்
வாய்ப்புக்கள் வாயில் கதவை தட்டும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பெற்ற பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : சேமிப்பு
சுவாதி : மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: வாய்ப்பு
 
 
விருட்சிகம்
தொட்ட காரியங்கள் தொடங்கும். பிரியமான சிலருடன் பயணம் செய்து மகிழ்வீர்கள். முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் உதவுவார்கள்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: பயணம்
கேட்டை: உதவி
 
 
தனுசு
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்
 
 
மகரம்
சொல்வதை செய்து காட்டும் நாள். ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: உற்சாகம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்
 
 
கும்பம்
கணிவான பேச்சுக்களால் காரியத்தை சாதித்துக் காட்டும் நாள். தொழில் ரீதியான பயணமொன்று ஏற்படலாம். எடுத்த சில பணிகளை பாதியிலேயே விட்டு விடுவீர்கள்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : பயணம்
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்
 
 
மீனம்
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பயணங்களை குறைத்துக்கொள்வது அவசியமாகும். தங்களுடைய பொருட்கள் மீது கவனம் தேவை.
பூரட்டாதி 4: துன்பம்
உத்திரட்டாதி : பயம்
ரேவதி : துக்கம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .