2021 ஜூன் 14, திங்கட்கிழமை

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பா.ஜக.வும் காங்கிரஸும் மும்முரம்

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களின் மனுத் தாக்கல், நாளை (14) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதில், பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும், மும்முரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதிலும் ஆளும் பா.ஜ.க, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வை, அனைத்து வகைகளிலும் மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித் ஷா, தனது அருணாச்சலப் பிரதேச பயணத்தை ஒத்திவைத்து விட்டு, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார். 

கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கட்சியின் முக்கிய தலைவர்களிடம் பரிந்துரைகளை அளிக்குமாறு, பா.ஜ.க, கேட்டுள்ளது. மேலும் பா.ஜ.க, ஆளும் மாநில முதலமைச்சர்களிடமும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த பரிந்துரைகளை அளிக்கும்படி கேட்டுள்ளது. 

அத்துடன், குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க, மூவர் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில், அமைச்சர்களான அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கைய்யா நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .