Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இறுதிச் சடங்கொன்றில் வெடித்த மூன்று குண்டு வெடிப்புகளால், குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்ததாக, சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில், மேம்பட்ட பாதுகாப்பை வலியுறுத்தி, நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கொல்லப்பட்டவரும் செனட்டர் மொஹமட் அலாம் இஸ்யாரின் மகனுமான சலீமின் இறுதிச் சடங்குகள், சராய் ஷமலி பகுதியிலுள்ள டபா மர்ஷல் பாஹிம் மயானத்தில், நேற்று (03) இடம்பெற்ற மேற்படி குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
எதனால் வெடிப்புகள் இடம்பெற்றதென, தங்களுக்குத் தெரியாதென, உள்விவகார அமைச்சின் பேச்சாளர் நஜிப் டனிஷ், டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
குறித்த இறுதிச் சடங்கில், பிரதம நிறைவேற்றதிகாரி அப்துல்லாஹ் அப்துல்லாஹ் உட்பட, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
காபூலில், கடந்த புதன்கிழமை (31) இடம்பெற்ற பாரிய வெடிப்பொன்றில், குறைந்தது 90 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, கடந்த வெள்ளிக்கிழமை, வீதிகளில், ஆர்ப்பாட்டங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்தியிருந்தனர். இந்நிலையில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக, துப்பாக்கிப் பிரயோகங்களை பொலிஸார் மேற்கொண்ட நிலையில், குறைந்தது நான்கு பேர் இறந்திருந்தனர்.
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago