2021 ஜூன் 19, சனிக்கிழமை

சீனாவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 617 பொதுமக்கள் உயிரிழப்பு;9,980 காயம்

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் ஏற்பட்டுள்ள பூமியதிர்ச்சி காரணமாக, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவின் குங்குவாய் மாகாணத்தில் நேற்றுக் காலை இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் இந்த பூமியதிர்ச்சி 7.1ஆக பதிவாகியுள்ளது.

சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக 617 பொதுமக்கள் உயிரிழந்திருக்கும் அதேவேளை, 9,980 பொதுமக்கள் காயமடைந்திருப்பதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், 313 பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்த பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, 1000 பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .