2021 மே 13, வியாழக்கிழமை

லாகூர் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாகூரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, உலகத் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

குறித்த தாக்குதல், கிறிஸ்தவர்களை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த தாக்குதலைக் கண்டித்த வத்திக்கான், குறித்த தாக்குதல், 'கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கெதிரான வெறித்தனமான வன்முறை" எனத் தெரிவித்தது.
தாக்குதலைக் கண்டித்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மத சிறுபான்மையினரைப் பாதுகாக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுடன் தொலைபேசி மூலம் உரையாடிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'சோதனைமிகுந்த இந்த நேரத்தில், பாகிஸ்தான் உடன்பிறப்புகளோடு, இந்திய மக்கள் இணைந்து நிற்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

தாக்குதலை 'கோழைத்தனமானது" என விளித்த அமெரிக்கா, இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தது. அத்தோடு, பயங்கரவாதத்தை அழிப்பதற்கு, பாகிஸ்தானுடன் சேர்ந்து செயற்படப் போவதாகவும் உறுதிமொழி வழங்கியது.

நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானியச் சிறுமியான மலாலா யூசப்ஸாய், 'பாகிஸ்தானும் உலகமும் ஒன்றிணைய வேண்டும். ஒவ்வோர் உயிரும் பெறுமதியானது என்பதோடு, மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .