2021 ஜூன் 21, திங்கட்கிழமை

விமான விபத்தில் போலாந்து நாட்டு ஜனாதிபதி உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலாந்து நாட்டு ஜனாதிபதி லீச் காசியன்ஸிகி நேற்றிரவு இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன், 97 பொதுமக்களும் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமான விபத்து ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. கடுமையான பனிமூட்டம் காணப்படுவதாகவும், இதன் காரணமாக, விமானத்தை வேறொரு விமான நிலையத்தில் தரையிறக்குமாறு விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், விமான நிலையத்தில் வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை விமானிகள் அலட்சியம் செய்ததால், இந்த விபத்து இடம்பெற்றதாகவும் ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

போலாந்து நாட்டு அரச அரண்மனைக்கு முன்னால் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்கள், விமான விபத்தில் உயிரிழந்த ஜனாதிபதிக்கு மெளுகுதிரி மற்றும் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறினார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .