Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஷியின் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள சிக்கனமான நடவடிக்கைக்களுக்கு எதிராக இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓய்வூதியத்தை முற்றுமுழுதாக மாற்றியமைக்கும் திட்டம் மற்றும் ஒய்வுபெறும் வயது எல்லையை 60 முதல் 62 வயது அதிகரித்தமை தொடர்பிலும் பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பிரான்ஸில் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால், மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தொழிலாளர் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸில் ஓய்வுபெறும் வயது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட குறைவாகவுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினை நாட்டில் அரசியல் ரீதியான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago