2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கியூபாவில் பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்குத் திட்டம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தளம்பல் காரணமாக பாரியளவிலான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கியூபா நாட்டு அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் தமது வேலை வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என கியூபா நாட்டு தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் இணைந்து கொள்வதற்கோ அல்லது சுயதொழிலில் ஈடுபடுவதற்கோ இவர்களுக்கு ஊக்கமளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், தற்போதுள்ள சில பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏறத்தாழ கியூபாவின் பொருளாதாரம் முழுவதையும்  கியூபா நாட்டு அரசாங்கம் கட்டுப்படுத்தி வருவதுடன், 85 சதவீதமான தொழிலாளர்கள் அரசாங்கத் தொழிலாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐந்திலொரு பங்கு தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .