2021 ஜூன் 14, திங்கட்கிழமை

போர்த்துக்கல் நாட்டில் வெள்ளப்பெருக்கு; 43பேர் பலி

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல் நாட்டிலுள்ள மடராய் தீவில் கடந்த  மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 42 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 120 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கட்டிட இடிபாடுகள் மற்றும் சேறுகளில் புதையுண்டவர்களை தேடும் பணிகளில் உதவிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப் பிரதேசங்களில் தண்ணீர், மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள்  இடைநிறுத்தப்பட்டிருக்கும் அதேவேளை,  நூற்றுக்கணக்கானோர்  வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திடம், போர்த்துக்கல் அரசாங்கம் நிதியுதவி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .