2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இவ்வாரத்தில் பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டாவது பாரிய குண்டுத் தாக்குதல் இதுவாகும்.

ஷியா முஸ்லிம்களின் மத ஊர்வலமொன்றை இலக்குவைத்து இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலையடுத்து குவேட்டா வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .