Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரிஸ் நகரைச் சேர்ந்த ஒருவர் வெவ்வேறு தாய்மார்களுக்குப் பிறந்த 55 பிள்ளைகளுக்குத் தான் உயிரியல் ரீதியான தந்தையென்று பொய்கூறி பெயர் பதிவு செய்ததால் 10 வருட சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்.
வெளிநாட்டுப் பெண்களுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் உதவித் தொகையையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்காகவே அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுவந்துள்ளார்.
54 வயதுடைய அவர், ஆபிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர். பாரிஸிலுள்ள வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 பேருக்கும் அதிகமானோர் அந்த விலாசத்தில் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்தமைக்கான ஆவணங்கள் பொலிஸ் சோதனையின்போது அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மோசடி இந்நடவடிக்கை காரணமாக, பிரான்ஸ் அரசாங்கத்திற்கு வருடாந்தம் ஒரு மில்லியன் யூரோ செலவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 42 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர் அந்த குழந்தைகளுக்கு உயிரியல் தந்தையென அப்பெண்கள் கூறியுள்ளதாக பாரிஸ் பொலிஸாரின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மனிதர் செனகல், கெமரூன் உட்பட ஆபிரிக்க நாடுகளில் மதுபான சாலையில் இரவு விடுதிகளில் மேற்படி பெண்களை சந்தித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அப்பெண்கள் சுமார் 150-200 யூரோ கட்டணம் செலவிட்டு, மேற்படி நபர் தமது குழந்தைகளுக்குத் தந்தையென பாரிஸில் பதிவு செய்து ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.
ஆனால் அரசாங்க உதவித் தொகையாக அவர்கள் மாதாந்தம் சுமார் 7500 யூரோ வரை பெற்றுக்கொண்டுள்ளனர்.
'இது தொடர்பாக புலனாய்வு விசாணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் அந்த பிள்ளைகளுக்கு உயிரியில் ரீதியான தந்தை யார் என்பதை தீர்மானிப்பதற்கான டி.என்.ஏ. சோதனைகள் மேற்கொள்ளப்படும்' என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
40 minute ago