Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 15 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து போர் தொடுத்து வருகின்று.
இப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான உக்ரேனிய மக்கள் தஞ்சம் கோரி அயல் நாடுகளை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துவரும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ரஸ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பேய்ன், தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய நாட்டிற்குரிய பாதுகாப்பு துறைக்கான போக்குவரத்து நிறுவனம், கப்பல் கட்டும் நிறுவனம் போன்ற 14 நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
இப் பட்டியலில் ரஷ்யாவின் மின் சாதனப் பொருட்களுக்குரிய பாகங்களை தயாரிக்கக்கூடிய முக்கிய நிறுவனமாக விளங்கும் ரஸ்எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .