Freelancer / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாடுகளின் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கு நாளை முதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, இது தொடர்பாக உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதனிடையே, ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்பால் நியாயமற்ற வகையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் 10 முதல் 15 நாடுகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார். (a)
7 minute ago
18 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
21 minute ago
28 minute ago