2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அமெரிக்கா ஹனுமன் சிலை: ஜனாதிபதி ஆதரவாளர் சர்ச்சை

Editorial   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில், ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் ஹனுமன் சிலை குறித்து டெக்சாஸ் குடியரசுக் கட்சித் தலைவர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சுகர்லேண்டில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில், 90 அடி உயர ஹனுமன் சிலை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் டங்கன் என்பவர், 'டெக்சாசில் பொய்யான ஹிந்துக் கடவுளின் ஒரு பொய்யான சிலையை ஏன் அனுமதிக்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .