2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

அமெரிக்காவில் வேலை அனுமதி காலவரம்பு குறைப்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 08 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது அமெரிக்காவில் வேலை அனுமதிக்கான கால வரம்பை 5 ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாக குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குடியேற்றக் கொள்கை சீரமைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அடைக்கலம் கோருபவர்கள், அரசியல் அடைக்கலம் பெற்றவர்கள், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் உட்பட பல புலம்பெயர்ந்த குழுக்களுக்கான குடியேற்ற விதிகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதி ஆவணங்களின் (இ.ஏ.டி) செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளிலிருந்து 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X