Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் “தேசத்தின் நிலை” உரைக்கு, ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வப் பதிலை வழங்கிய உரையாற்றிய ஸ்டேஸி ஏப்ரம்ஸ், அண்மையில் ஏற்பட்ட அரசாங்க முடக்கத்தை, “ஜனாதிபதியின் வித்தை” என வர்ணித்ததோடு, மத்திய, உழைக்கும் வர்க்க மக்களுக்கான பொருளாதார வளர்ச்சிக்கும் கோரிக்கை விடுத்தார்.
அண்மையில் இடம்பெற்ற மத்தியகாலத் தேர்தல்களில், ஜோர்ஜியாவின் முதலாவது ஆபிரிக்க-அமெரிக்க, பெண் ஆளுநராகத் தெரிவாகும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டிருந்த ஸ்டேஸி, ஜனாதிபதி ட்ரம்ப் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“அரசாங்க முடக்கமென்பது, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வித்தை. ஒவ்வொரு சிறிய நியாயப்பாட்டையும் எமது மக்களை மாத்திரமன்றி எமது விழுமியங்களையும் கைவிட்ட ஒரு செயற்பாடு” அவர் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் தொடர்பில், ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்த ஸ்டேஸி, அதற்கு மத்தியிலும், அவர் தோற்க வேண்டுமென நினைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். “ஆனால் அவர், உண்மையைச் சொல்ல வேண்டும் எனவும் தனது கடமைகளையும் அமெரிக்காவை வரைவிலக்கணப்படுத்தும் அற்புதமான பல்வகைமையையும் மதிக்க வேண்டுமெனவும் நாம் எதிர்பார்க்கிறோம்” என, அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரையில் முக்கியமான விடயமாக, எல்லைச் சுவரை அமைப்பதும் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதும் காணப்பட்ட நிலையில், அதற்கான நேரப் பதிலை வழங்கிய ஸ்டேஸி, எல்லைச் சுவர்களன்றி, குடியேற்றவாசிகளே ஐ.அமெரிக்காவைப் பலமிக்கதாக்குகின்றனர் எனத் தெரிவித்தார்.
அதேபோல், குடியரசுக் கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் ஒன்றாக, வாக்களிப்பதைக் கடினமாக்கும் நடவடிக்கைகள் காணப்பட்டன. அவற்றை விமர்சித்த அவர், வாக்களிக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
35 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
9 hours ago
05 Nov 2025