2026 மே 14, வியாழக்கிழமை

அல்பம் சேதமடைந்ததால் மீண்டும் டும் டும் டும்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது திருமண அல்பம் சேதமடைந்ததால் மீண்டும் திருமணம் செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வீடியோவொன்று  பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளமொன்றில் குறித்த பெண்ணின் திருமண வீடியோ மற்றும் அல்பம் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது திருமண நிகழ்வு குறித்த பதிவுகளை சேகரிக்க இரண்டாவது முறையாகவும்  திருமணம் செய்யவுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கமொன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .