Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல்பேனியாவில் இருந்த சுமார் 50 அகதிகள் படகு மூலம் இத்தாலிக்கு கொண்டு வரப்பட்டனர்.
பங்களாதேஷ், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுகின்றனர். ஆனால் இந்த அகதிகள் குடியேற்றத்தால் அங்கு சட்டம், ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த எல்லை பகுதிகளில் ஐரோப்பிய நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன.
இதற்கிடையே கடந்த ஆண்டு, சுமார் 66 ஆயிரம் பேர் அகதிகளாக இத்தாலியில் குடியேறியுள்ளனர். எனவே, அகதிகள் குடியேற்றத்தை தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் இத்தாலிக்குள் நுழைய முயன்ற 50 பேரை கைது செய்த கடலோர பொலிஸார், அல்பேனியாவில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர்களை நாடு கடத்த அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் அவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதித்து இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அல்பேனியாவில் இருந்த சுமார் 50 அகதிகள் படகு மூலம் இத்தாலிக்கு கொண்டு வரப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
53 minute ago
57 minute ago