2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அ.இ.அ.தி.மு.க கூட்டணி தொகுதிகள் அறிவிக்கப்பட்டன

Editorial   / 2019 மார்ச் 17 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) கூட்டணியின் தொகுதிகள் பட்டியலை, அக்கட்சியின் இணைப்பாளரும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வர், இன்று (17) அறிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க), பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க), தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தே.மு.தி.க), தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, என். ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இதில், அ.இ.அ.தி.மு.கவுக்கு 20 தொகுதிகளும், பா.ம.கவுக்கு ஏழு தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு ஐந்து தொகுதிகளும், தே.மு.தி.கவுக்கு நான்கு தொகுதிகளும், மற்றைய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) முந்திக்கொண்டு கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகளை அறிவித்தபோதும், பா.ம.க, தே.மு.தி.க ஆகியவற்றிடையேயான இழிபறி காரணமாகவே அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் தொகுதிகளை அறிவிப்பது தாமதமாகி தற்போது அறிவிக்கப்பட்டது.

குறித்த தொகுதி அறிவிப்பில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தபோதும் பா.ம.க, தே.மு.தி.கவினர் கலந்துகொண்டிருக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X