2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியை நடத்திய தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானில் பல்கலைக்கழகமொன்றிற்கு அருகே,  நேற்று முன்தினம்(26) ஆசிரியை ஒருவர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பாகிஸ்தானில்  ‘பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்‘ என்ற கிளர்ச்சிக்குழு செயற்பட்டு வருகின்றது. 

இக்  கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

இந்நிலையில் கராச்சி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் செயற்பட்டு வரும் சீனமொழி பயிற்றுவிக்கு கல்வி மையம் அருகே  குறித்த கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் , அக் கல்வி மையத்தைச் சேர்ந்த சீனர்கள் மூவர் உட்பட நால்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்நிலையில் குறித்த ஆசிரியையின் பெயர்  ‘பரம்ஷா‘ எனவும் அவர் விலங்கியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளதுடன், அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது.

   மேலும் அவர் , 2 பிள்ளைகளின் தாயார் எனவும் அவரது கணவர் வைத்தியர் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X