S.Renuka / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல், மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேன்சர் மருந்துகள், இன்சுலின், உயிர்க் காக்கும் மருந்துகளின் விநியோகம் தாமதப்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதனால் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகள் பல மருந்து பொருட்களுக்கு இறக்குமதியைச் சார்ந்தே உள்ளன.
இந்நிலையில், ஈரான் போர் நீடித்தால், இங்கு மருந்து விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மருந்து விலையும் அதிகரித்து வருகிறது.
பல நாடுகளின் விமானப் போக்குவரத்துக்கு துபாய் மையமாக விளங்கியது. இங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருந்துகளின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவசரகால மருந்துகள் பல வழிகளைச் சுற்றி அனுப்பப் படுகின்றன. எரிபொருள் பற்றாக்குறை மருந்துகளின் விநியோகத்தை தாமதப்படுத்தியுள்ளது. காசா போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மருந்துகள் எல்லாம் பல இடங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
கேன்சர் மருந்துகள் உள்ளிட்ட சில மருந்துகளுக்கு குளிர்சாதன வசதி தேவை. அதனால் ஈரான் போர் நீடித்தால் இவற்றின் விநியோகம் கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago