2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

ஆப்கானிஸ்தான் தாக்குதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற பின்னர் ஆப்கானிஸ்தான் அரசை கைப்பற்றி தலீபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானை ஒட்டி ஆப்கானிஸ்தான் அமைந்து உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரு நாடுகளின் எல்லை பகுதியில் ஆப்கானிஸ்தான், கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது என பாகிஸ்தான் குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதன்படி, தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துகிறது என கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இந்த பயங்கரவாத அமைப்பின் மீது தாக்குதல் என கூறி விட்டு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு தன்னுடைய தாக்குதலை நேற்றிரவு நடத்தியது. இதுபற்றி ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாண அரசின் செய்தி தொடர்பாளர் மவுலவி முகமது காசிம் ரியாஸ் கூறும்போது, பஹ்ராம்பூர் மாவட்டத்தில் துராந்த் லைன் பகுதியருகே ஆப்கானிஸ்தான் படைகளின் பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

எங்களுடைய படைகள், பாகிஸ்தானின் 3 ராணுவ நிலைகளையும் கைப்பற்றியது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். காபூல் நகர் மற்றும் பக்திகா மாகாணங்களின் மீது நடந்த பாகிஸ்தானின் சமீபத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X