2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘இக்கட்டான நிலையில் பிரெக்சிற்’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் (பிரெக்சிற்) செயற்பாடு, இக்கட்டான நிலையை நோக்கிப் பயணிப்பதாக, ஐ.இராச்சியத்தின் ஓய்வூதிய அமைச்சர் அம்பெர் றுட் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் தொடர்பில், பிரதமர் தெரேசா மே-ஆல் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட, வாக்கெடுப்பில் தோல்வியடைவது உறுதியானதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பைப் பிற்போட்டுவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன், பிரதமர் மே, பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான உறுதிமொழிகளையும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடமிருந்து பிரதமர் பெறாத நிலையில், தடுமாற்றத்தை எதிர்கொள்கிறார்.

இந்நிலையிலேயே, “ஓரிடத்தில் தங்கி நிற்பதற்கான ஆபத்தை பிரெக்சிற் எதிர்கொள்கிறது. அது, எம்மனைவருக்கும் கவலையை ஏற்படுத்த வேண்டும்” என, அமைச்சர் றுட் குறிப்பிட்டார்.

பிரதமரின் ஒப்பந்தத்துக்கு எதிராக, எம்.பிக்கள் அணிதிரண்டு, ஒப்பந்தத்துக்குத் தடங்கலை ஏற்படுத்தினார்கள் என்றால், எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை இல்லாது, நாட்டில் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படுமென அவர் எச்சரித்தார்.

பிரெக்சிற் ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் மாத்திரமன்றி, அமைச்சர்களிடத்திலும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X