2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமையை இரத்தாக்குகிறார் ட்ரம்ப்

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமையை முடிவுக்கு கொண்டு வரும் திட்டமொன்றுடன், தனது வர்த்தக போர்களின் புதிய முனையொன்றை திறக்க, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் எதிர்பார்த்துள்ளார்.

குறித்த வர்த்தக முன்னுரிமை காரணமாக, ஐக்கிய அமெரிக்காவுக்கான 5.6 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்தியாவின் ஏற்றுமதிகள் தீர்வையில்லாமல் செல்வது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கும் ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியாவின் உயர் வரிகள் காரணமாக இந்தியாவைத் தொடர்ந்து விமர்சித்து வந்திருந்தார்.

அந்தவகையில், இந்திய அரசாங்கத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமான தீவிர ஈடுபாட்டைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள சந்தைகளுக்கான நியாயமான அணுகுதலை வழங்குமென்ற உறுதிமொழியை ஐக்கிய அமெரிக்காவுக்கு இந்தியா வழங்கவில்லை என தீர்மானித்ததாலேயே, தான் குறித்த நடவடிக்கையை எடுத்தாக, ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கான கடிதமொன்றில் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

காங்கிரஸ், இந்திய அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சலுகைகளை இல்லாமற் செய்வதற்கு, குறைந்தது 60 நாட்கள் செல்லும் என ஐக்கிய அமெரிக்க வர்த்தக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னுரிமைகளுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பு (ஜி.எஸ்.பி) திட்டத்தின் கீழ் நன்மை உலகின் மிகப்பெரிய நாடு இந்தியா என்ற நிலையில், இதை முடிவுக்கு கொண்டு வருவது, 2017ஆம் ஆண்டு ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கான கடுமையா நடவடிக்கையாக நோக்கபடுகிறது.

இந்நிலையில், குறித்த வர்த்த முன்னுரிமைத் திட்டமானது, உண்மையாக 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையே ஆண்டொன்றுக்கு இந்தியாவுக்கு சாதகமாக வழங்குகின்றபோதும், குறித்த திட்டத்திலிருந்து வெளியேறுவது வர்த்தக தடங்கல்களுக்கு வழங்காதென நம்புவதாக, இந்திய அரசாங்கத்தின் தகவல் மூலமொன்று, இந்தியத் தலைநகர் புது டெல்லியில் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பியானது பெரும்பாலும் உத்திநோக்கு உறவின் அடையாளமெனவும் பெறுமதி வாய்ந்ததல்ல என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத குறித்த தகவல் மூலம் தெரிவித்துள்ளது.

இணைய வர்த்த ஜாம்பவான்களான அமெஸோன், வோல்மார்ட்டின் பிளிப்கார்ட் ஆகிவை வியாபாரம் செய்வதை மட்டுப்படுத்துவதற்காக, புதிய, இணைய வர்த்தக விதிமுறைகளை இந்தியா அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X