Freelancer / 2025 மார்ச் 28 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா செல்ல இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கான இந்திய தூதரகமும், ரஷ்ய சர்வதேச விவகார கவுன்சிலும் இணைந்து நடத்திய "ரஷ்யா மற்றும் இந்தியா: ஒரு புதிய இருதரப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி" என்ற தலைப்பிலான மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது.
இதில், காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய செர்ஜி லாவ்ரோவ், “ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்திய அரசாங்கத் தலைவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியக் குடியரசுக்கு ரஷ்யத் தலைவர் வருகை தர உள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த ஆண்டு ரஷ்யாவுக்கு வருகை தந்தார். இப்போது எங்கள் முறை.” என்று தெரிவித்துள்ளார். (a)
1 hours ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025