Freelancer / 2022 ஜனவரி 05 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் காஷ்மீரின் குப்வரா மாவட்டத்துக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பிரஜை இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என, இந்திய இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாகி உள்ளிட்ட ஆயுதங்களையும் மீட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர் மொஹமட் ஷாபிர் மாலிக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கி, 7 கைக்குண்டுகள் உட்பட பொருட்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பகுதியிலிருந்து சனிக்கிழமை மாலை 3 மணியளவில் ஊடுருவல் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவித்த குறித்த அதிகாரி, 4 மணிவரை அசைவு தொடர்ந்ததையடுத்தே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்தவரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையின் மூலம் அவருடைய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் எல்லை கடக்கும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அனுசரணை வழங்குகின்றமை தெளிவாகத் தெரிவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
15 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago