Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஜனவரி 01 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் , இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
"40 வயது விதவை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைக்கப்பட்டு உள்ளது. அவரது தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. தலை முழுவதும் உள்ள சதையை காட்டுமிராண்டிகள் அகற்றியுள்ளனர். பொலிஸ் குழுக்கள் சின்ஜோரோ பகுதிக்கு விரைந்து உள்ளனர் என அந்த டுவிட்டரில் கூறி உள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜியாலா அமர் லால் பீல், சிதைக்கப்பட்ட உடல் வயலில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து பொலிஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவரின் உடல் மற்றும் முகத்தில் இருந்து தோல் உரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago