Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் பிரான்சில் 90 நாட்கள் மாத்திரமே தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவிப்பானது பிரித்தானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பிரித்தானியர்கள் ஐரோப்பிய மற்றும் வெளியுறவு விவகார அமைச்சகத்துக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் ”90 நாட்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்க முடியும் என்ற அறிவிப்பு பிரித்தானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே முன்பு இருந்தது போல 180 நாட்களுக்கு விசா இல்லாமல் தங்கு முடியும் என்று நடைமுறையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு பிரான்ஸ் அரசு ” 90 நாட்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்க முடியும் என்ற முடிவை ஐரோப்பிய ஒன்றியமே எடுத்துள்ளது. இதில் எங்களால் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது .
குறிப்பாக பிரித்தானியா ஏற்கனவே இருந்த தடையில்லா போக்குவரத்து சேவை திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது எனவும் பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அண்மையில் பிரித்தானியா வெளியேறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .