S.Renuka / 2025 ஜூன் 04 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்திற்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த வரி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரும்பு, அலுமினியம் மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு இன்று புதன்கிழமை (04) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இரும்பு, அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றதையடுத்து, இலங்கை, இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரி விதிப்பை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
49 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
49 minute ago
2 hours ago
2 hours ago