Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 28 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2019ல் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, அல்-காதர் டிரஸ்ட் மூலம் கணக்கு காட்டாமல் முறைகேடாக நன்கொடைகளை பெற்றது உட்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் கடந்த 2022ல் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் மீது பல்வேறு பிரிவுகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த செப்.26 முதல் உயர் பாதுகாப்புள்ள ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அல்-காதிர் டிரஸ்ட் வழக்கில் பல கோடி மோசடி செய்ததாக பாக். ஊழல் தடுப்பு ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் கானை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago